சுற்றுசூழல் அதிகாரி பாண்டியன் சஸ்பெண்ட்

 ஊழல் புகாருக்கு உள்ளான சுற்றுசூழல் அதிகாரி பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுற்றுசூழல் கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து சுற்றுசூழல்துறை உத்தரவிட்டுள்ளது. ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில், பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளது  சுற்றுசூழல்துறை. லஞ்சம் வாங்கி கோடிக் கணக்கில் நகை, பணம் சேர்த்தது அம்பலமானதால் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும், சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான வங்கி லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. 

சென்னை மற்றும்  புதுக்கோட்டையில் உள்ள வங்கிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். 

இதனிடையே, அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.37 கோடி பணம், 3 கிலோ தங்கம் உள்பட ரூ. 10 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.