குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

 


குருவாயூரில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் அளவு 1500 என்பதிலிருந்து 4000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முடிவை குருவாயூர் தேவஸ்வதான நிர்வாக கமிட்டிஎடுத்துள்ளது. 

கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக, தினசரி 1500 பக்தர்கள் வரைதான் தற்போது கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதை இனி 4000 ஆக உயர்த்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமை முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட தேவஸ்தான தலைவர் கே.பி.மோகன்தாஸ், நிர்வாகி பிரீஜா குமாரி ஆகியோரின் கூட்டறிக்கையில், பக்தர்கள் நலம்பலம் பகுதிக்கு அனுமதிக்கப்படுவர். தரிசனமுமும் செய்ய அனுமதிக்கப்படுவர். தற்போது சுட்டம்பலம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுதவிர செவ்வாய்க்கிழமை முதல் கிருஷ்ணர் கோவிலில் தினசரி 1000 திருமணங்கள் வரை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தினசரி 60 திருமணம் என்ற அளவிலேயே உள்ளது என்பது நினைவிருக்கலாம்.