சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர்

 


வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை 19.12.2020 சேலத்திலிருந்து முதலமைச்சர் தொடங்குகிறார்.

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.

அதிமுக – திமுக இடையே எப்போதும் வழக்கம்போல நேரடி போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் 18.12.2020  சேலத்தில் முதலமைச்சர்  பேட்டி அளித்தார். 

அப்பொழுது அவர் கூறுகையில், 19.12.2020  முதல் சேலம் மாவட்டம் பெரிய சோரகை பெருமாள் கோயில் அருகே 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.