தேனென இனிக்கும் தமிழ்!"

 தேனென இனிக்கும் தமிழ்!"

கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டு வரும்படி சொல்லியிருந் தேன் அவன் அன்று வாரமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித் தேன், .அவன் பேசினான்.

“நேற்றே மலைக்கு நடந் தேன்,  பலவிடங்களில் அலைந் தேன், இறுதியில் பெரும் பாறைத் தேன், கண்டு சிறிது மலைத் தேன், ஒரு கொடியை பிடித் தேன், ஏறிச்சென்று கலைத் தேன், சட்டியில் பிழிந் தேன், நன்றாக வடித் தேன், அதனைக் கண்டு மகிழ்ந் தேன், அதில் சிறிது குடித் தேன், களித் தேன், களைத் தேன், அயர்ந் தேன், மறந் தேன், 

இன்று காலை எழுந் தேன்,  நினைத் தேன், தேனை அடைத் தேன்,  எடுத் தேன், 

விரைந் தேன், நடந் தேன்,  வந் தேன், சேர்ந் தேன், 

இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத் தேன், என்று.

அடடா எப்படி தேன், ? எவ்வளவு  தேன், ? ஒவ்வொரு சொல்லிலும் தேன், சொட்டுகிறதே!

Movie : Veera Abhimanyu (1965)
Singers : PBS, P.Susheela
Music : K.V. Mahadevan
Lyricist : Kannadasan

ஆ: பார்த்தேன் சிரித்தேன்,

பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன்,

பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்

பெ: பார்த்தேன் சிரித்தேன்,

பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன்,

பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்

ஆ: கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்
கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்
துளி தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தேன்

பெ: பார்த்தேன் சிரித்தேன்,

பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்

பெ: மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்

உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்
மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி தேன், இல்லாதபடி கதை முடித்தேன்

ஆ:பார்த்தேன் சிரித்தேன்,

பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்

பெ: பார்த்தேன் சிரித்தேன்,

பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்

அந்த மலை தேன், இவரென மலைத்தேன்

"என்னே தமிழின் இனிமை."

பார்த் தேன் படித் தேன் ரசித் தேன் பகிர்ந் தேன்

தொகுப்பு மோகனா செல்வராஜ்

வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ்