வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும் வரை போராட்டம் தொடரும்

 

வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும் வரை போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராஜேஷ் தீக்கெட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க கடந்த 8 ஆம் தேதி பாரத் பந்த் அறிவித்தனர். 

இதற்கு பல இடங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும் வரை போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராஜேஷ் தீக்கெட் கூறியுள்ளார்.