900 பில்லியன் டாலர் நிவாரணத்திற்கு ஒப்புதல்-அமெரிக்க நாடாளுமன்றம்

 

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் மற்றும் வணிகங்களுக்கு நீண்டகாலமாக ஊக்கமளிக்கும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கான 900 பில்லியன் டாலர் நிவாரணத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


உலகிலேயயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் அமெரிக்கா தான்.இதன் விளைவாக பலர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.


மேலும் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமை விகிதம் தொடர்ந்து அங்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.இதனால் பொருளாதார பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கர்கள் மற்றும் வணிகங்களுக்கு நீண்டகாலமாக ஊக்கமளிக்கும் வகையில் தான் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கான 900 பில்லியன் டாலர் நிவாரணத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது