வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்

  


ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மனுத் தாக்கல் செய்த நிலையில் தற்போது அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்ய தமிழக அரசு கூடுதல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருதலைபட்சமாக விசாரணை நடந்ததாக கூறி வேதாந்தா நிறுவனம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் உயர்நீதிமன்ற விசாரணையை விமர்சிக்கும் வேதாந்தா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.