தீபாவளி செய்திகள்

 தீபாவளியையொட்டி தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 11.11.2020 முதல் நவ. 16 வரை 6 நாட்கள் இ-பாஸ் இன்றி பேருந்தில் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


_____________________________


தீபாவளியை கொண்டாடுவதற்காக வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் 20 பேருக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 20 கைதிகளுக்கு 3 நாட்கள் பரோல் வழங்கி வேலூர் மத்திய சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


-----------------------------


தீபாவளியை ஒட்டி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இலவச உடைக்கு பதில் பணம் தர புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். உடைக்கு பதில் வங்கி கணக்கில் பணம் செலுத்த ரூ.6.63 கோடி நிதி ஒதுக்கி புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.


__________________________


ஆந்திராவில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பசுமை பட்டாசு மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.