அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்-அதிமுகவுக்கு பேரிழப்பு-ஆளுநர் இரங்கல்.


கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி காலமானார்.


அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.


 இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார்


மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 13ம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


துரைக்கண்ணுவுக்கு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  கடந்த சில தினங்களாகவே அவரது உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 31.10.2020 சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்..


அமைச்சர் துரைகண்ணு 90% நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் அதிமுக செயலாளராக இருந்தவர் துரைகண்ணு. தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் 1948 பிறந்த இவருக்கு வயது 72. தொடர்ச்சியாக மூன்று முறை பாபநாசம் எம்எல்ஏவாக தேர்வானவர். 


வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் பிஏ படித்தார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.


பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அதிமுகவில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட வேளாண் விற்பனை தலைவராகவும் பதவி வகித்தார்.  2006,  2011 மற்றும் 2016 என மூன்று ஆண்டுகள் தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தமிழக வேளாண்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில் அமைச்சர் துரைகண்ணுவின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அவ்வாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அமைச்சர் துரைகண்ணுவின் மறைவை அறிந்து மிக வருத்தம் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.



இதே போல் அமைச்சர் ஜெயக்குமார்  அமைச்சர் துரைகண்ணுவின் மறைவு, அதிமுகவுக்கு பேரிழப்பு மேலும் அமைச்சர் துரைகண்ணு ஒரு எளிமையான மனிதர், பொதுமக்களிடம் அன்பாக பழகக்கூடியவர் மற்றும் அவரது மறைவுக்கு அரசு விதிமுறைப்படி இரங்கல் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

அமைச்சர் துரைகண்ணுவின் மறைவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் பெரும் அன்புக்குரிய மாண்புமிகு தமிழக வேளாண் துறை அமைச்சர், திரு.துரைக்கண்ணு அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மற்றும்  நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்  என்று கூறியுள்ளார்.

 

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சென்னையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

 


 


இந்நிலையில் சென்னை காவிரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார்.


அவருடன் அமைச்சர்கள் காமராஜ், உதயராஜ் ஆகியோரும் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.


அஞ்சலி செலுத்திய பின்னர் முதல்வர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சிப்பணியில் திறம்பட பணியாற்றியவர் அமைச்சர் துரைக்கண்ணு அவரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.இந்த இழப்பு கட்சிக்கு பேரிழப்பு என்று உருக்கம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




தமிழகத்தில் அமைச்சர் உயிரிழப்பு என்பது இதுவே முதல் முறை.