சீனாவில் மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸானது முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் உருவானது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸானது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவில் ஈக்வடார் கடல் உணவு தயாரிப்பு நிறுவனமான, பயர்ஸ்பா நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, மீன்களின் பேக்கேஜில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சீன சுங்க அதிகாரிகள், அந்த நிறுவனத்திலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய, ஒரு வாரத்திற்கு தடை விதித்துள்ளனர்.
மேலும், உறைந்த உணவு பொருட்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஒரு வாரத்திற்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும், மூன்றாவது முறை அல்லது அதற்கு மேல் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்படும் என்று சீன சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.