அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லா குட்டி


அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லா குட்டி.


அமெரிக்காவில், போஸ்டனில் உள்ள பிராங்க்ளின் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும், கிகி என்ற 39 வயதான கொரில்லா ஆண்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.


இந்த கொரில்லாவுக்கு, குழந்தை பிறப்புக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பதாகவே, சிரமம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை மூலமாகவே குட்டியை வெளியே எடுத்துள்ளனர்.


இந்நிலையில், பொதுவாகவே கொரில்லா குட்டிகள் 3-5 பவுண்டுகள் மட்டுமே எடை இருக்கும். ஆனால், இந்த குட்டி 6 பவுண்டுகள் எடை இருந்துள்ளது.


அதாவது, 2 கிலோ 700 கிராம் எடை இருந்துள்ளது. இந்த குட்டியை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிற நிலையில், இந்த குட்டியை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், இந்த குட்டிக்கு இன்னும் எந்த பெயரும் வைக்கப்படவும் இல்லை.