காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி



தேவையான பொருட்கள் : பொருள் - அளவு


புழுங்கல் அரிசி 2 கப்
பச்சரிசி 2 கப்
உளுத்தம் பருப்பு 1 கப்
நல்லெண் ணெய் 1 டேபிள்ஸ்பு ன்
சுக்கு தூள்1/2 TSP
உப்பு தேவையான அளவு
ஆப்ப சோடாஒரு சிட்டிகை
கடுகு 1/2 டீஸ்பு ன்
உளுத்தம்பருப்பு 1 TSP
கடலைப் பருப்பு 2 TSP
மிளகு 1/2 TSP
சீரகம் 1 TSP
தேங்காய் துருவல் 2 TSP
கறிவேப்பிலை சிறிதளவு 
பெருங்காயம் 1/2 டீஸ்பு ன்
எண்ணெய் 2 TSP
இஞ்சி ஒரு துண்டு (துருவியது)


செய்முறை :


🍪 காஞ்சிபுரம் இட்லி செய்வதற்கு முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 


🍪 பிறகு அவற்றை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும். 


🍪 பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கரைத்துப் புளிக்க வைக்கவும். 


🍪 பிறகு புளித்த மாவில் சுக்கு தூள், ஆப்ப சோடா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். 


🍪 பிறகு நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றவும்.


🍪 பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, எண்ணெய்  சுடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து பொன்னிறமானதும், அதில் மிளகு, சீரகத்தை மிக்ஸியில் நன்கு அரைத்து அதனுடன் சேர்க்கவும். 


🍪 பிறகு இஞ்சி, கறிவேப்பிலையை வதக்கி மாவுடன் சேர்க்கவும். 


🍪 பிறகு அனைத்தையும் நன்றாகக் கலந்து, மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்தெடுக்கவும்.


🍪 சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார். 


உங்களது வீட்டில்  காஞ்சிபுரம் இட்லி செய்து அனைவரையும் அசத்திடுங்கள்

 

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன் கார்த்திகா