23.10.2020 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீர் மாரடைப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிக்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கபில் தேவ் சிரித்த முகத்துடன் கையை உயர்த்திக்காட்டும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கபில் தேவ் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கபில் தேவ் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளார். அவர் ஐசியுவில் தான் உள்ளார். சில நாட்களில் வீடு திரும்புவார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.