ரயில் பயண டிக்கெட் சேவை


 


இன்று(10-10-2020) முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கூட, பயண டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.


கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு 2வது சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய முறையை மீட்டெடுக்கும் முயற்சியாக, இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு தொடங்கி 5 நிமிடத்துக்கு முன்பு வரை 2வது சார்ட் தயாரிக்கப்பட உள்ளது.


இந்த இடைப்பட்ட நேரத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு, ஆன்லைன் அல்லது கவுன்ட்டர்கள் மூலம் பயணிகள் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.