இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மறைந்த தினம்

 பிறப்பு.


மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தார். இந்திரா பிரியதர்சினி என்பது அவரது இயற்பெயர்.


தனித்திறன்


1964 மே 27இல் நேரு மரணமடைந்தார், புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, உடனடியாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார்.


இந்தி மொழி பேசாத மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி தேசிய மொழியாக ஆக்கப்பட்டதன் காரணமாக எழுந்த போராட்டங்கள் கார்ணமாக இந்திரா மெட்ராஸ் (Chennai)  விரைந்தார்.


அங்கு அரசாங்க அதிகாரிகளுடன் பேசிய அவர், சமுதாய தலைவர்களின் கோபத்தை மட்டுப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டுமான முயற்சிகளையும் பார்வையிட்டார்.


தாங்கள் காட்டத் தவறிய இதுபோன்ற முனைவால், லால்பகதூர் சாஸ்திரியும், பிற மூத்த அமைச்சர்களும் வியப்படைந்தார்கள்.


அமைச்சர் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் சாஸ்திரியைக் குறிவைத்தோ அல்லது அவரின் சொந்த அரசியல் முன்னேற்றங்களையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை.


அறிவிக்கப்பட்ட வகையில் அவர் அவரின் அமைச்சக செயல்பாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் ஊடக ஆர்வலராகவும், அரசியல் மற்றும் தனிச்சிறப்பை உருவாக்குவதிலும் அவர் தனித்திறன் பெற்றிருந்தார்.


முதல் பெண் பிரதமர்.


1966 ஜனவரியில் தாஸ்கண்ட் என்ற இடத்தில் உருசியாவின் முன்னிலையில், தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பாகிஸ்தானின் அயூப் கானுடன் ஓர் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார்.


பின்னர், மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பு இருந்த போதினும், இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக ஆக்குவதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் கே. காமராஜ்  இருந்தார்.


மொரார்ஜி தேசாய் பின்னர் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டார், இதில் இந்திரா காந்தி 355 க்கு 169 வாக்குகள் பெற்று மொரார்ஜி தேசாயியைத் தோற்கடித்து இந்தியாவின் ஐந்தாவது தலைமை அமைச்சராகவும் அப்பதவியைப் பெறும் முதல் பெண்மணியாகவும் ஆனார்.


இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது மற்றும் முதல் பெண் பிரதமர் ஆவார். பெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி.


இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார். சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவர்.


பதவிக்காலம்.


அன்றைய காலகட்ட அரசியலில் ஒரு பெண்ணாக தனது தனித்துவத்தை காட்டினார். இவரது ஆட்சிகாலம் என்பது 1966-ம் ஆண்டு முதல் 1977 வரை இருந்துள்ளது. 1977-ம் ஆண்டு அவசரநிலைக்கு பிறகு 1980-ல் மீண்டும் பிரதமர் ஆனார்.


இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் 1966-ம் ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில்இருந்தார்.


பசுமை புரட்சி


இந்தியா ஒரு உணவு ஏற்றுமதியாளராக மாறியது. அதன் வணிக முறையிலான பயிர் உற்பத்தியுடன் கூடிய இந்த சாதனை "பசுமை புரட்சி" என்று கூறப்பட்டது.


அதே வேளையில், குறிப்பாக இளம் குழந்தைக்களுக்கு இருந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை, எதிர்த்து போராட உதவும் வகையில், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் வெண்மை புரட்சி எனப்பட்டது. 'உணவு பாதுகாப்பு' என்று அழைக்கப்பட்ட திட்டம், 1975 வரையிலான ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு உதவியாக இருந்தது


ரூபாய் மறுமதிப்பீடு


1960களின் இறுதிப்பகுதியில், வணிகத்தை அதிகரிக்க இந்திராவின் நிர்வாகம் இந்திய ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலரின் அடிப்படையில் 4லிருந்து 7க்கு 40% மறுமதிப்பீடு செய்ய ஆணையிட்டது.


அணு ஆயுதங்கள் திட்டம்


சீனாவின் மக்கள் குடியரசிடம் இருந்து வந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பிரதிபலிப்பாகவும், அணுசக்தி அதிகாரங்களிடமிருந்து இந்தியாவின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் 1967ல் ஒரு தேசிய அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. 1974ல், மறைமுகமாக "சிரிக்கும் புத்தர்" என்ற இரகசிய சொல்லுடன், ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா வெற்றிகரமாக ஒரு நிலத்தடி அணுச்சோதனை நடத்தியது.


இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் அணுசக்தி அதிகாரமாக உருவானது.


அதிரடி திட்டங்கள்.


பாகிஸ்தானில் இருந்து பிரித்து வங்காளதேசம் எனும் தனிநாட்டை உருவாக்கியது, ரா உளவுப்பிரிவு உருவாக்கியது என பல முன்னேற்ற திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார்.

மறைவு.


இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி  தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார்.


சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள்.


இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார்.


தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இந்திரா காந்தி தனது ஆட்சிகாலத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார்.


1984-ம் ஆண்டு நடந்த ‘ஆப்ரேஷன் புளூ ஸ்டார்’க்கு பிறகு, இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.


தொகுப்பு மோகனா செல்வராஜ்