தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா


மனிதர்கள் உண்ணக்கூடிய உணவு வகைகளில் பூமிக்கடியில் விளைகின்ற ஒரு பருப்பு வகையாக நிலக்கடலை இருக்கிறது.

 

இதை வேர்க்கடலை என்றும் கூறுவார்கள். தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த நிலக்கடலை தற்போது உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.

 

நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி நிலக்கடலை அதிகம் உண்கின்றனர். இயற்கையான சத்துக்களை அதிகம் கொண்ட இந்த நிலக்கடலையை மனிதர்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை.


இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும். நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது.


இதில் உள்ள மாங்கனீஸ் அமிலம், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இது நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலைஉண்பது நல்லது.


நம் உணவில் இருக்கும் கால்சியம் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. குறிப்பாக பெண்கள், முதியவர்கள் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்கலாம்.


தினமும் 15 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும்.


நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய நரம்புகளை பாதுகாக்கிறது.


இதயநோயை தடுக்கிறது. மாரடைப்பு அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.


நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்து உடலில் உள்ள தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.


பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் இ 1, இ 12, உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.


நிலக்கடலையில் போலிக் ஆசிட் அமிலம் அதிகம் உள்ளது.


நிலக்கடலையில் உள்ள பாலிபனீல்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இளமையை பராமரிக்க உதவுகிறது.


இதில் உள்ள நியாசின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.


அல்சைமர் என்பது முதுமை அடைந்த நபர்களுக்கு ஏற்படும் தீவிர ஞாபக மறதி நோயாகும். இந்த நோய் நம் நாட்டில் மிகக் குறைந்த அளவிலும், மேலை நாடுகளில்  அதிக அளவில் ஏற்படுகின்ற ஒரு நோயாக இருக்கிறது.

 

இந்த நோய் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக மூளைக்குத் தேவையான சத்துக்கள் இல்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவது என கூறப்படுகிறது.

 

நிலக்கடலையில் நியாசின் அமிலம் அதிகமிருக்கிறது. நிலக்கடலையை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு ஞாபக சக்தி வலுவடைவதோடு, மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாக இருக்கிறது. மேலும் அந்நபருக்கு 70 சதவீதம் வரை இந்த அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 


எக்சிமா மற்றும் சோரியாசிஸ் எனப்படும் தோல் வியாதிகள் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது. பரம்பரை காரணங்கள், உடலில் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால்   மேற்கூறிய வியாதிகள் ஏற்படுகின்றன.

 

இந்த நோய்களின் தீவிரத்தன்மையை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் இருக்கிறது என்றாலும் முழுமையாக குணப்படுத்துவதற்கான மருந்துகள் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 

எனவே இத்தகைய நோய்கள் ஏற்படாமல் தடுப்பதே சிறந்த நிவாரணமாக கருதப்படுகிறது.

 


உலகம் முழுவதும் இருக்கின்ற இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்கள், பெண்களுக்கு தலை முடி உதிர்வு ஒரு கவலைக்குரிய விடயமாக இருக்கிறது. ஊட்டச்சத்து குறைவு , உடலில் சுரக்கின்ற ஹார்மோன்களின் காரணங்களால் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது.

 

நிலக்கடலையில் வைட்டமின் பி சத்து வகையை சார்ந்த பயோட்டின் எனப்படும் வேதிப்பொருள் இருக்கிறது. இந்த பயோட்டின் தலை முடியின் ஆரோக்கியத்தை காப்பதோடு, அதிக அளவில் முடி உதிர்வதை தடுக்கிறது. முடி உதிர்ந்த இடங்களிலும் மீண்டும் முடி வளர செய்ய தூண்டுகோலாகவும் செயல்படுகிறது.நாம் மிகவும் சத்தானவை என கருதும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை விட வேர்கடலை அதிக சத்து மிக்கது ஆகும்.


நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது.

 

மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது. வயதிற்கேற்ற  உடல் எடையையும் கொடுக்கிறது.

 இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் உடல் நலம் பயணம் தொடரும்.


வணக்கம் அன்புடன்  மோகனா செல்வராஜ்