பாஸ்ட்ஃபுட் சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்

 பாஸ்ட்ஃபுட் வாங்கி தாருங்கள், இல்லையென்றால் பட்டினி கிடப்பேன் என அடம் பிடித்த சிறுவனுக்கு பெரம்பலூரில் நிகழ்ந்த சோகத்தை பாருங்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சண்முகம் கீதா ஆகிய தம்பதிக்கு ஹரிகுமார் என்னும் மகன் ஒருவன் உள்ளார். சிறு வயது பையன் என்பதால் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார்.


இந்நிலையில், மற்ற உணவுகளை கொடுக்கும் பொழுது நான் சாப்பிட மாட்டேன் எனக்கு அந்த உணவு தான் வேண்டும் எனவும், அவ்வாறு கொடுக்கும் போது சாப்பிடாமல் பட்டினி கிடப்பார் எனவும் கூறியுள்ளனர். இதனால் பெற்றோரும் அவன் அடம் பிடிப்பதால் அதிகமாக பாஸ் புட் உணவுகளை வாங்கி கொடுத்துள்ளனர்.


இதன் விளைவாக கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹரிகுமார், தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி அதிகமாக ஏற்படவே அவசர அவசரமாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


ஆனால் பாதி வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனை செய்து பார்த்த பொழுது மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடல் புண் அதிகமாக இருந்துதான் சிறுவனின் மரணத்திற்கு காரணம் என கூறியுள்ளனர்.


மேலும் பெற்றோர்கள், பிள்ளைகள் அடம்பிடிக்கிறார்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் சமாளிக்க முடியாமல் வாங்கிக் கொடுக்கிறோம் என கூறி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய உணவுகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்த்து, அந்த ஒரு முறை கண்டித்தாலும் நமது குழந்தையை நாம் பாதுகாக்கிறோம் என்ற சந்தோஷத்துடன் நல்ல உணவுகளை வாங்கிக் கொடுத்து வளர்ப்பது கடமை.