இந்தியா ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கரோனா

 



ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு அறிகுறியற்ற கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இதனை அவர் சுட்டுரையில் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இருப்பினும், தான் நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


ரிசர்வ் வங்கியில் பணிகள் வழக்கம்போல் பணிகள் நடைபெறும் எனக் குறிப்பிட்ட அவர் கான்பிரன்ஸிங், தொலைபேசி மூலம் அனைத்து நாள்களிலும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.