ருத்ராட்சம் - பற்றிய பகிர்வுகள் :

 நமது உண்மை  செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாமா ? என்பது பற்றிய பகிர்வுகள் :


சிவபெருமானின் அம்சமாக ருத்ராட்சம் பார்க்கப்படுகின்றது. ருத்ராட்சம் மட்டுமல்லாமல் அந்த மரமும் நல்ல வசியம் கொண்டது
    
நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். 


ருத்ராட்சம் எப்படி அணிவது, யார் எல்லாம் அணியலாம், அதன் பயன்கள் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் பலரின் மனதில் எழுவதுண்டு.


ருத்ராட்சம் அணிவதால் எப்படிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் அதை எப்படி வழிபடுவது என்பதை பார்ப்போம்.


உருத்திராக்கம் என்பது இந்த பூலோகத்தில் சிவ பெருமானின் அவதாரமாக, சிருஷ்டிக்கக் கூடிய ஒரு மூலிமை மரமாகும். சித்தர்களின் அனுக்கிரகமாக்க அவர்கள் தியானம் செய்யும் போது ருத்ராட்சம் அடைந்து தியானம் செய்வார்கள்.


சிவன் எங்கெல்லாம் தாண்டவம் ஆடினாரோ அங்கெல்லாம் ருத்ராட்ச மரங்கள் வந்தன என இப்போதும் ஐதீகம் உள்ளன.


ருத்ராட்சத்திற்கு மொழி உள்ளது. ருத்ரங்களின் அந்த வடிவத்திற்கும், கோடுகளையும் வைத்து எழுதப்படுவது ருத்ர மொழி. ஒவ்வொரு நடன யோகமும் இந்த ருத்ராட்சத்தில் உண்டு. எத்தனையோ மூலிகைகள் உள்ளன. ஆனால் அதிகமாக வசியம் செய்யக் கூடிய சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு.


பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.


‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. 


ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். 


ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். 


அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.


இன்று நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். 


இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அணியக்கூடாது. பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.


ஆனால் இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. 


அதன் ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை என்பது ஆன்மிகத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறும் வாக்காகும்.


சிவபெருமான் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை ஈசன், கண்போலக் காப்பாற்றுவார். 


எனவே அனைவரும் ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணிய வேண்டியது அவசியம். 


ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். 


நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ;


இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;


கடலை அளவுடையது அதமம்.


ருத்ராட்சம் வேறு பெயர்கள்


தெய்வமணி, நாயகமணி, முண்மணி, கடவுண்மணி, சிவமணி, கண்டம், கண்மணி, கண்டி, கண்டிகை என்பன அக்கமணியின் மறு பெயர்கள்.


நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.


யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்


சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். 


அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.


அதிக விலைகொடுத்து அபூர்வ வகையிலான ருத்ராட்சத்தை வாங்கி அணியவேண்டும் என்று அவசியமில்லை. 


எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்தாலே போதுமானது. சிவபெருமானின் திருமுகம் ஐந்து. நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து. 


பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் தான் இயற்கையே மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தை பூமிக்கு அருள்கிறது. 


எனவே ஐந்து முக ருத்ராட்சங்களை அணிவதே சிறப்பு. ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.


பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் விவரிக்கிறது. 


எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம். 


சிவ மகாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஈசனே வலியுறுத்தியிருக்கிறார்.


பெண்கள் தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சத்தையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். 


ருத்ராட்சத்தை ஈசன் அருளியது மனிதன் வாழும் உடலுக்காக அல்ல.. உயிரின் ஆன்மாவிற்காக என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


பித்ரு கடன் நிறைவேற்றும்போது ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழும். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.


நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. 


கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது பலரும் சொல்லும் வாக்கு. பாவங்களால் தான் நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றன. அதற்காக நாம் கங்கையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. 


ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும். 


நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் படிப்படியாக குறையும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 


பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். 


இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.


ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 


எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. 


திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை எழுத்தாலோ, மனதலோ பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால், 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.


ருத்ராட்சம் அணிபவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை அதற்கு பூஜை செய்து அணிவது நல்லது. அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது பிரதோஷம் அல்லது திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிவது நல்லது.


ஒரு தாம்பூலத் தட்டு எடுத்துக் கொண்டு. அதில் ஒரு வெத்திலை வைத்து அதன் மீது ருத்ராட்சத்தை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பால், சந்தனம், விபூதி, பன்னீர், வில்வம் கொண்டு ருத்ராட்சத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.


அபிஷேகம் செய்வதற்கு முன் ருத்ராட்சத்தைப் பன்னீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பூஜை செய்து அணிந்து கொள்ள ருத்ராட்சத்திலிருந்து நல்ல சக்திகள் கிடைக்கும். 


ருத்ராட்சத்தை வைத்து தியானம் செய்ய செய்ய அதன் சக்தியை நாமே உணர முடியும். பலரும் தெய்வ உத்தரவு வாங்குவதைப் போல ருத்ராட்ச மாலையை வைத்து நாம் செய்யும் செயல்கள், நினைக்கும் காரியங்கள் நிறைவேறுமா இல்லையா, நாம் செல்லும் இடத்தில் சுபம் உண்டாகுமா இல்லையா என்பதை உத்தரவு வாங்கவும் செய்யலாம்.


நாம் உள்ள இடத்தில் நேர்மறை சிந்தனைகள், நேர்மறை அதிர்வுகள் சிறப்பாக இருந்தால், நாம் ருத்ராட்ச மாலையை ஒரு தட்டின் மேல் தொங்குவது போல பிடித்தால் அது வலதிலிருந்து இடது புறமாக சுற்றத் தொடங்கும். அப்படி இருந்தால் நாம் நினைக்கும் நல்ல காரியங்கள் நிறைவேறும்.


பொய், பொறாமை, ஏமாற்றுதல், தீமையானதைச் செய்தல், எந்த ஒரு உயிரினத்திற்கும் துன்பம் தருதல் என இதை எதையும் செய்யக் கூடாது. அப்படி ருத்ராட்சத்தை அணிந்து இவற்றை எல்லாம் செய்தால் ஒரு போதும் புண்ணியம் கிடைக்காது. திருடுதல், பொய், ஏமாற்றுதல் இல்லாமல் ருத்ராட்சம் அணிந்து நன்மை செய்ய அனைத்து வகை நன்மைகளும் தேடி வரும்.


ஆண்கள் எந்த வயதாக இருந்தாலும் அணியலாம்.


பெண் பிள்ளைகள் மாதவிலக்கு ஆகக் கூடியவர்கள் அணியாமல் இருப்பது நல்லது.


இரவில் தூங்கும் போது அதை கழற்றி பூஜை அறையில் வைத்து விடுவது நல்லது.


மாமிசம் சாப்பிடுபவர்கள் அன்று ருத்ராட்சத்தை கழற்றி வைத்து விடுவது நல்லது. மறு நாள் குளித்துவிட்டு இறைவனை வணங்கி அணிந்து கொள்ளலாம்.


ருத்ராட்சம் அணிந்து கொண்டு தீட்டு வீட்டு செல்ல வேண்டாம். காரிய சாப்பாடு சாப்பிடக் கூடாது.


பொய் பேசுதல், ஏமாற்றுதல் கூடவே கூடாது. இப்படி செய்தால் ருத்ராட்சத்தின் புண்ணியம் கிடைக்காது.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


அன்புடன் அதிதி