டாஸ்மாக்கில் பல கோடி கொள்ளை

 



தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், மதுரை தல்லாகுளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மாநிலத்தலைவர் பாலுசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜா, அரசு பணியாளர் சங்க மாநிலத்தலைவர் ஜெய்கணேஷ் பேசினர்.


கூட்டத்தில், கொரோனா ஊரடங்கு காலத்தில் நோய்த்தொற்றால் இறந்த டாஸ்மாக் பணியாளருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவச்செலவு முழுவதையும் நிர்வாகம் வழங்க வேண்டும்.


விற்பனை பணத்தை வங்கிகள் மூலம் நேரடியாக வசூல் செய்ய வேண்டும். கடைகளில் திருட்டால் ஏற்படும் இழப்பை காப்பீடு மூலம் ஈடு செய்ய வேண்டும்.


தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் துணையோடு டாஸ்மாக் கடைகளில் அரசுப்பணம் கோடி, கோடியாக கொள்ளை போனது தெரிய வந்துள்ளது.


இதுதொடர்பாக மேலதிகாரிகள், அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து கொள்ளை போன பணத்தை மீட்க வேண்டும். இதேபோல இதர மாவட்டங்களிலும் நடந்துள்ளதா? என தனிக்கமிட்டி அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.


வேலைநேரம் இரவு 8 மணி வரை என்பதை மாலை 6 மணி வரை என குறைக்க வேண்டும். பார்களை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.