அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது .இதனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.மேலும் அரசு ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகை முன் இன்று காலை 10.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.