3 மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு


உத்தரப்பிரதேசம், பஞ்சாப்,சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உத்தரபிரதேசம், பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


அதன்படி 9வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதலுடன் பள்ளிக்கு வர அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.


எந்த ஒரு மாணவரும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை கோவிட்19 நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


மேலும் ஒரு விட்டு ஒருநாள் பள்ளிகள் இயங்கும் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.