ஐபிஎல் 2020: டி20 போட்டி

 ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது.


துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.


இதனையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.