பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்-சித்திர சபை பகுதி 2

திருக்குற்றாலம் – சித்திர சபை – ம  பகுதி (2)


 


 


பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.


1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய


ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராகஎழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும்.இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன.


குற்றால மகிமை:  குற்றாலநாதர் கோயிலின் சித்திர சபை


புராணம்


திரிபுரதாண்டவம் பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெறுகின்றதென்று திருப்பத்தூர் புராணம் கூறுகிறது. திரிகூடமலைக்கு வந்து திருமாலும், பிரம்மாவும், தேவர்களும் தவம் செய்ய, அவர்களுக்காக இறைவன் திருக்கூத்து தரிசனம் தந்தார் என்கின்றன புராணங்கள்.

 


அழகான தெப்பக்குளம் சித்திரசபைக்கு முன்னர் தெப்பக்குளமும் அதன் மத்தியில் உயர்ந்த கோபுரமுள்ள நீராழி மண்டபமும் மிக அழகுடன் விளங்குகிறது. சபையில் நடராஜபெருமான்தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார்.

திருமால் சிவன் ஆனது திருவிளையாடல் புராணம்

கயிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயந்தது. இறைவன் அகத்தியரை நோக்கி தென்திசைக்கு சென்று வடதிசைக்கு சமனாய் பொதிகையில் வாழக்கடவாய் என ஆணையிட்டார்.


அப்போது முனிவர் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தயும் திருநடனத்தையும் காண இயலாதே என வருந்த இறைவன் திரிகூடமலையின் மகிமையை கூறி அங்கு விஷ்ணுவாயிருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூசித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் கானலாம் என் கூறி அனுப்பி வைத்தார்.


அகத்தியரும் அவ்வாரே தென்திசை சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுள் சென்று விஷ்ணு வை வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவதலமாக உள்ளது என்பது புராண வரலாறு கூறுகின்றது.


நன்நகரப்பெருமாள்


வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை கானாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். முணிவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் வைத்து பூசைசெய்யுங்கள் அரியும் சிவனும் ஒன்றே வேறுபாடு காட்டாதீர்கள் என உரைத்தார்.முத்தனே முளரிக்கண்ணா மூலமென்றழைத்த வேழப்

பத்தியி னெல்லைகாகும் பகவனெ திகிரியாளா

கத்தனே யருள்சூற்கொண்டகந்தரக் கருப்பினானே

நத்தணி செவியகோல நாடுதற் கரியநம்பி     


என்று சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லி பாடி கோயிலுள் சென்றனர் 


பூசைகள்


இறைவனுக்கு வழிபாடு மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும். ஐப்பசி திருவிழா, சித்திரை விஷுத் திருவிழாவின்போது, சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுவது சிறப்பாகும்.

பங்குனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதம் சித்திரை விசு, அமாவாசை, ஆவணி லம், நவராத்திரி, ஐப்பசி விசு, திருக்கல்யாணம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை. ஐப்பசி. மார்கழி மாதம் சித்திரை 5ம் திருநாள் ஐப்பசி 5ம் திருநாள். மார்கழி 5ம் திருநாள் தேரோட்டம் நடைபெறுகிறது.  தை மகம் திருவிழாவாக நடைபெறுகிறது.

 

தமிழகத்தில் சிவ பெருமான் நடனமாடிய பஞ்ச சபைகளுள் மிகவும் பழமையானது குற்றாலம் சித்திர சபை.


 


ஓவியவடிவில் இறைவன் தமிழகத்திலுள்ள ஐந்து சபைகளுள், குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மட்டுமே பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வகையில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இறைவன் ஓவிய வடிவில் காட்சியளிக்கிறார்.பிரம்மன் தீட்டிய ஓவியம் சடையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக்கண்டு பிரம்மதேவன் ஆதிசக்தி சிவபிரானுடைய சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசகர் முதலியோர் இதனைச்சித்திரசபை என்று அழைத்தனர். தேவர்கள் தினமும் வந்து சித்திரசபையை தரிசித்து செல்கின்றனர் என்பது நம்பிக்கையாகும்.
சித்திரசபை மூலிகை ஓவியங்கள் 600-ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பொலிவு பெற்றுள்ளன. குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவிலின் துணைக் கோவிலான சித்திரசபை, குற்றாலநாதர் கோவிலுக்கு வடபகுதியில் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.பராக்கிரம பாண்டியன் கி.பி.16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இச்சபை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காசி பராக்கிரமபாண்டியனால் இச்சபை கட்ட ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பின்னர் உதயமார்த்தாண்டவர்மனால் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 


குற்றாலத்தில் இறைவன் நடராஜபெருமாள் வடக்கே உள்ள திருவாலங்காட்டை விட்டு தெற்கே குற்றாலத்தை நோக்கி வந்தது இங்கு வீசும் தென்றல் காற்றில் இளைப்பாறவும், தீந்தமிழை அனுபவிக்கவும் என்று பரஞ்ஜோதி முனிவர் கூறுகியிருக்கிறார்.

 


பிரமீடு வடிவ ஆலயம் சித்திரசபை பிரமிடுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கூரை தாமிரத் தகடுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பிரமிடு அமைப்பின் நிழலும், தாமிரத் தகடுகளின் மணமும் மனதுக்கு அமைதியைத் தருவது கூடுதல் சிறப்பு.

 


பழமையான ஓவியங்கள் சித்திரசபையில் உள்ள சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் மூலிகைகளால் வரையப்பட்டவை. 

 


மனம் கவரும் ஓவியங்கள் வைணவக் கோவிலான குற்றாலநாதர் கோவில் சைவ கோவிலாக மாற்றப்பட்டது,

 

இறைவனின் திருமணக் காட்சி, கஜேந்திரமோட்சம் ஆகிய தல வரலாற்றுச் செய்திகள், 63 நாயன்மார்கள், பத்மநாபசுவாமிகளின் அனந்தசயனம், மதுரை மீனாட்சியம்மனின் திருவிளையாடல் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன.தரிசிப்பது சிறப்பு:

 

குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்துச் செல்லும் சுற்றுலா பயணிகள் இறைவனின் பஞ்சபைகளில் ஒன்றான சித்திரசபையை கண்டு தரிசித்து செல்லவேண்டும்.

நாளை திருவாலங்காடு – இரத்தின சபை – சி


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்