இன்றைய ராசிபலன் 03-10-2020

 



மேஷம்


ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். . சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


ரிஷபம்


கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியருடன் விவாதம்வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்


மிதுனம்


எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு  கண்டு பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பினை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


கடகம்


தனது சொந்த பந்தங்களில்   சிலர்  கேட்ட  உதவியை  செய்வீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்காதீர்கள். கோபத்தால் பகை உண்டாகும். மனதை ஒருநிலை படுத்துங்கள்.


சிம்மம்


கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி திரும்பும்.


கன்னி


சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.


துலாம்


பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். 


விருச்சிகம்


சமயோசிதமாக சாதுரியமாகவும் பேசி காரியம்சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.


தனுசு


குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.


மகரம்


திட்டமிட்ட காரியங்களைசிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும் நாள். 


கும்பம்


குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களைமாற்றி கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.  வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில்  சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். நல்லன நடக்கும் நாள்.


மீனம்


குடும்பத்தில் சந்தோஷம்நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்