டெல்லியில் இந்தியா கேட் அருகே டிராக்டர் எரிக்கப்பட்டது .

 டெல்லியில் இந்தியா கேட் அருகே டிராக்டர் எரிக்கப்பட்டது .


நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது.


இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களும் ஜனாதிபதியின் ஓப்புதல் வழங்கிய உள்ளார். 


இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் ஒரு டிராக்டர் எரிக்கப்பட்டது.