மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு

  


மிஸ் சௌத் இந்தியா அழகி போட்டி ஒருங்கிணைப்பாளரும், ராஸ் மெட்டாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகை மீரா மிதுன் மீது எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


இதனடிப்படையில் எம்.கே.பி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாடல் அழகி மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.