“கைகள் இணையட்டும் தமிழகத்தை வெல்லட்டும்” போஸ்டர்


2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுரையில் சிலர், திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் மு,க,அழகிரி ஆகியோர் இணைய வேண்டும் என்பதை தெரிவிக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.அந்த போஸ்டரில் மு.க.அழகிரியின் புகைப்படத்துடன்  “கைகள் இணையட்டும் தமிழகத்தை வெல்லட்டும்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் போஸ்டர்கள் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.