பள்ளிகள் திறந்ததும் அவசியம்.. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்

 



தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல்... பள்ளிகள் திறக்க அனுமதி


தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு செய்யாமல் வேறு வகையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்


மாணவர்களை பள்ளிக்கு அழைத்து முன்பாக வகுப்பறைக்குள் உள்ள, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களின், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்படவேண்டும். ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைட் சொல்யூஷன் கொண்டு சுத்தம் செய்தல் அவசியம்.


சமூக இடைவெளியை பராமரிப்பதற்காக வகுப்பறையில் தரைப் பகுதியில் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்க வேண்டும்.


பள்ளிகள் வரும் முன்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யலாம். தும்மல் அல்லது இருமல் வந்தால் வாய் மற்றும் முகத்தை மூடிக்கொண்டு அதை செய்ய வேண்டும். இதற்கு முழங்கையை பயன்படுத்தலாம். அல்லது டிஷ்யூ பேப்பர், கர்ச்சீப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். பிறகு அவற்றை உரிய முறையில் கழிவுகள் போடப்பும் இடத்தில் போட வேண்டும். உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவது போல தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அது பற்றி தெரிவிக்க வேண்டும். 


கழிப்பிடம் உள்ளிட்ட அவ்வப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் முறையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். அங்கும் சமூக இடைவெளி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.