இந்தி தெரியாது போடா என்றால் படிக்காமல் இருங்கள் - ஹெச்.ராஜா


இந்தி தெரியாது போடா என்றால் படிக்காமல் இருங்கள் என்று  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில்  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.அவர் கூறுகையில், திமுகவில் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.


கனிமொழியும் ராசாவும் தாங்கள் தனிமைப் படுத்தப் பட்டதாக எண்ணுகின்றனர். இந்தி தெரியாது போடா என்றால், படிக்காமல் இருங்கள்.கிசான் திட்டத்தில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பெயரை அரசு வெளியிட்டு, அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.


புதிய தேசியக் கல்விக் கொள்கையில் எந்த ஒரு பாடத்திட்டமாக இருந்தாலும் அனைவருக்கும் சமமானதாக இருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் எல்லா மொழிகளும் இருப்பதனால், அது பன்முகத் தன்மை கொண்டதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.