நீலகிரிக்கு வந்து சென்றால் கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


நீலகிரி மாவட்ட ஆட்சியர், வெளிமாவட்ட மக்கள் சுற்றுலாவுக்காக நீலகிரிக்கு வந்து சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் வரக்க்கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.