மருத்துவ மேம்படுத்துவதில் தமிழகம் முதல்வர்


இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக தமிழகம் உள்ளது. அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியுள்ளார். 


உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தற்போதுள்ள 3,250 மருத்துவ இடங்களுடன் புதிதாக 1,250- இடங்களுக்கும் சேர்த்து சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளார்.


மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 32,600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.