விநாயகர் சிலை செய்யும் கடைகளுக்கு வட்டாட்சியர் சீல் வைப்பு.


 


வருகிற 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், காஞ்சிபுரம் அய்யம்பேட்டையில் விநாயகர் சிலை செய்யும் கடைகளுக்கு வட்டாட்சியர் சீல் வைத்தார்.


சீல் வைத்ததை கண்டித்து வாலாஜாபாத் வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு சிலை செய்பவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.