மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


முதலில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தற்போது ஆகஸ்ட் 31-ஆம்  வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி மாலை  முதலமைச்சர் ஆலோசிக்கிறார்.


மேலும்  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி 29-ஆம் தேதி  காலை ஆலோசனை நடத்த உள்ளார், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மீண்டும் நீட்டிக்கப்படுமா ?  என்பது ஆலோசனைக்கு பின்னர் தான் தெரியும்.