கொரோனா நோய் தொற்று


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,520-ஆக உயர்ந்துள்ளது.  


இந்தியாவில் இதுவரை 10.77 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 38,902 பேர் கொரோனாவால் பாதிப்பு.காஞ்சிபுரத்தில் மனைவிக்கு கொரோனா உறுதியான அதிர்ச்சியில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் உயிரிழந்தார்.


கடலூர் மாவட்ட கூடுதல் துணை ஆட்சியராக பணியாற்றி ஒய்வு பெற்ற ராமு அதிர்ச்சியில் உயிரிழந்தார்.உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 608,856 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 14,640,349 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,734,789 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,815 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ஆந்திராவில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இதுவரை  49,650 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 22,890 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 26,118 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,518 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,10,455- ஆக அதிகரித்துள்ளது