சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது

ஷாம் 12 பி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதை தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்தவர்.



அதோடு இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, உள்ளம் கேட்குமே போன்ற பல நல்ல படங்களில் நடித்தவர்.


அது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலுன் ஒரு சில முன்னணி நடிகர்களின் படத்தில் செகண்ட் ஹீரோவாக தலையை காட்டினார்.


சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக நடிகர் ஷாம் உள்பட 13பேர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை எனவும் தகவல் கிடைத்துள்ளது.


இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அது மட்டுமின்றி இரவில் இவரை கைது செய்தது பலருக்கும் அதிர்ச்சி தான்.