தனியார் மருத்துவமனையில் பா. வளர்மதி

 சென்னை: முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் பா. வளர்மதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் திரு.நாகராஜன் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் பழனிசாமிதெரிவித்துள்ளார்


பா.வளர்மதி விரைவில் பூரண நலம்பெற்று திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.: முதல்வர் பழனிசாமி


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது


கோரதாண்டவம் ஆடும் கொரோனா: தமிழகத்தில் உயிரிழப்பு 1,500ஐ தாண்டியது


______________________


 


தருமபுரி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கொரோனாவால் உயிரிழந்தார். நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  பி.எஸ்.என்.எல். ஊழியர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிரஞ்சனின் உடலை வாங்க பயந்து உறவினர்கள் யாரும் வராததால் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


_____________________


தலையில் வேப்பிலையுடன் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய தொழிலாளி தலையில் வேப்பிலையுடன் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய தொழிலாளி


கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு முதியவர் பலி - புதிதாக 4 பேருக்கு தொற்று கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு முதியவர் பலி - புதிதாக 4 பேருக்கு தொற்று