பிரெட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடா
உடல்நிலை சரியில்லை என்றால் அனைவரும் முதலில் பரிந்துரைப்பது பிரெட்தான். அதேபோல் காலை உணவிற்காக பிரெட் டோஸ்ட், பிரெட் ஆம்லெட் , பிரெட் ஜாம் என சாப்பிடுவார்கள்.
வீட்டில் எதுவுமில்லை பசியை போக்க வேண்டுமெனில் பிரெட் இருந்தால் உடனே டோஸ்ட் செய்து சாப்பிடுவது என பிரெட் பல வீடுகளில் பல வகைகளில் உதவுகிறது.
ஆனால் இந்த பிரெட் நல்லதா என்கிற சந்தேகமும் சில நேரங்களில் எழுகிறது. அதை தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை.
வெதுப்பி ( bread) வேளாண்மை தொடங்கிய காலமுதல் வரலாறு முழுவதும் உலகெங்கும் நயந்து உட்கொண்ட முதன்மையான மிகப் பழைய செயற்கை உணவாகும்.
மாவும் பிற உட்கூறுகளின் விகிதமும் செய்யும் வழிமுறைகளும் தணலில் அடுதல் (சுடுதல்) முறைகளும் பேரளவில் வேறுபடும். இதனால், ரொட்டிகளின் வகையும் வடிவமும் உருவளவும் உட்கட்டமைப்பும் உலகெங்கும் வேறுபடுகின்றன.
ரொட்டி இயற்கையான நுண்ணுயிரிகளாலோ வேதிமங்களாலோ தொழிலகச் செயல்முறை நொதிகளாலோ உயரழுத்தக் காற்றூட்டத்தாலோ நொதுப்பிக்க அல்லது பதப்படுத்தப்படுகின்றன.
சிலவகை ரொட்டிகள் பதப்படுத்துவதற்கு முன்பே மரபாக அல்லது சமயச் சடங்காக சமைக்கப்படுவதும் உண்டு.
ரொட்டியில் கூலமல்லாத உட்கூறுகளாகிய பழங்களும் கொட்டைகளும் கொழுப்புகளும் உட்கூறுகளாக அமைவது உண்டு. வணிக உரொட்டிகளில், சில கூடுதல் சேர்க்கைப்பொருள்களைச் செய்தலை எளிதாக்கவும் மணம், வண்னம், வாணாள், உட்கட்டமைபு ஆகியவற்றை மாற்றவும் சேர்ப்பர்
பகல் உணவுடன் பல வடிவங்களில் ரொட்டிகள் சேர்த்துக் கொள்ளப் படுகின்றன. இது நொறுக்காகவும் உண்ணப்படுவதோடு, கலப்படைகள் செய்யும்போது உட்பொருளாகவும் சேர்க்கப்படுகிறது.
வறுப்பு உணவுகல் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, ரொட்டிச் சிதைவுகள் கலக்கப்படுவதுண்டு. இது ரொட்டிப் புட்டுகளிலும் ரொட்டி பலகாரங்களில் சாறுகளைத் தேக்கிவைக்க துளைநிரப்பும் அடைபொருள்களாகவும் முதன்மையான உட்கூறாகவும் பயன்படுகின்றது.
ரொட்டி ஊட்டப் பொருளாக மட்டுமன்றி, சமூகவய, உணர்ச்சிவயச் சிறப்பையும் பெற்றுள்ளது. இது சமயச் சடங்குகளில் முதன்மை பங்கு வகிக்கிறது. சமய நீக்கப் பண்பாட்டிலும் அன்றாட வாழ்விலும் தவிர்க்க முடியாத பங்கேற்கிறது.
இந்நிலை, மொழியிலும் பழமொழிகளிலும் கொச்சையான சொற் பரிமாற்றங்களிலும் வெளிப்படுகின்றது. பேச்சு வழக்கான ("He stole the bread from my mouth")என்பதும் வழிபாட்டில் பயன்படும் ("Give us this day our daily bread") என்பதும் சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.
ரொட்டி நடுவண் கிழக்குப் பகுதி வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் முதனமை உணவாகும். ஐரோப்பியப் பண்பாடு பரவிய தஎன் அமெரிக்கா, ஆத்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இது முதன்மையான உணவாக விளங்குகிறது; ஆனால், கிழக்கு ஆசியாவில் அரிசியே முதன்மையான உணவாக விளங்குகிறது.
ரொட்டி வழக்கமாக நொதிவழி புளித்த கோதுமை மாவுக் குழைவையில் இருந்து செய்யப்படுகிறது; பிறகு அடுமனை அடுப்பில் சுடப்படுகிறது. ரொட்டியில் உள்ள காற்றுப் புரைகள் ஈச்ட்டு சேர்க்கப்பட்டதைக் காட்டுகிறது.
மாவுக்கு பஞ்சுத்தன்மையையும் மீள்திறத்தையும் தரும் இதன் உயராற்றல் மட்ட மாப்பிசின் (gluten) காரணத்தால், கோதுமை ரொட்டி செய்யப் பரவலாகப் பயன்படுகிறது; மேலும் கோதுமையே தான் மட்டும் தனியாக உலகின் உணவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்கிறது.
இதை எகிப்தியர்கள்தான் முதன் முதலில் உணவாக பயன்படுத்தியுள்ளனர். அன்று ஆரோக்கியமாக தயாரிக்கப்பட்டது. இன்றோ கார்போஹைட்ரேட் அதிகமாக சேர்ப்பதால் உடலில் கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் டையட் பின்பற்றுவோர் முதலில் தவிர்க்கும் விஷயம் பிரெட்தான்.
அதேபோல் பிரட்டுகளை கெட்டுப்போகாமல் நீண்ட நாட்களுக்கு வர அதைப் பதப்படுத்த சில உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்ப்பதாகவும், உப்பு, சர்க்கரை போன்றவை அதிகம் சேர்ப்பதால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்கின்றனர்.
இதில் அதிகமான கார்போஹைட்ரேட் கலப்படம் இருப்பதால் செரிமானிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் என்கின்றனர். அதேபோல் தானியங்களான கோதுமை, ராகி போன்றவற்றில் செய்யப்படும் பிரெட்டுகளில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், இரும்புச் சத்து போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால் வெள்ளையாக இருக்கும் பிரெட்டுகள் இப்படி எதுவுமே இல்லாததாக உள்ளது.
சிலருக்கு க்ளூடன், (gluten) தானியம் ஒவ்வாமை இருந்தால் இந்த பிரெட் முற்றிலும் தவிர்க்க வேண்டியதாக உள்ளது. எனவே பிரெட் என்பதும் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் ஒன்றாகவும் உள்ளது.
உடல்நிலை சரியில்லாதபோதும் உடலுக்கு ஆற்றல் தர அதில் இருக்கும் கார்போஹைட்ரேட் உதவும் என்பதாலேயே கொடுக்கப்படுகிறதே தவிர அதனால் சத்துக்கள் ஏதுமில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
வேண்டுமென்றால் தானிய வகைகளில் தயாரிக்கப்பட்ட பிரெட் தரலாம். அதுவும் அவர்களுக்கு அலர்ஜி இருந்தால் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
மோகனா செல்வராஜ்