ஓராண்டுக்கு- முகக்கவசம் அரசு அதிரடி


கேரளாவில் அடுத்த ஓர் ஆண்டுக்கு பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு மாநில அரசு தடை  விதித்துள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதன்முதலாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. 


இதன் பயனாக, கொரோனா தொற்று பட்டியலில் டாப் 5 இடத்தில் கேரளா, மளமளவென கீழிறங்கியது. தற்போது அங்கு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொடரும் அளவுக்கு நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது.


இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடைமுறைகள், விதிமுறைகள் இன்னும் ஒராண்டுக்கு அமலில் இருக்கும் என்று கேரள அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.


குறிப்பாக, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகள் தொடர்ந்து ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என்று கேரள மாநில அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.