நாளை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம்

 


:


நாளை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம்


தமிழகத்தில் நாளை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் என்பதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும், மீறி ஊர் சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.


அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும், மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களுக்கும், அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது


கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பால், மருந்தகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் 140 கடைகள் அமைக்கப்பட்டு தற்காலிக காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது.


----------------------------


நில அளவீட்டு கட்டணம் நிர்ணயம்:


தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நன்செய் நிலத்தின் எல்லையை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.