காவல் ஆணையாளர்-பாராட்டு

 அம்பத்தூர்  பகுதியில்  இரு சக்கர  வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபரை பிடிக்க  உதவிய  ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள்  (20.7.2020) அன்று நேரில்  அழைத்து  பாராட்டி வெகுமதி  வழங்கினார்மதுரை அழகர்கோவிலில் ஆடித்தேரோட்டம் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலூரை சேர்ந்த ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சந்தாதாரர்களிடமிருந்து சந்தாவிற்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது; மீறி வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.