சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமின்


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவா் தணிகாசலம், கரோனா நோய்த்தொற்றுக்கு தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், தமிழக முதல்வா் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாகவும் சமூக ஊடகங்களில் கூறும் காட்சிகள் பரவியது. 


4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் மீது கொடுக்கப்பட்ட புதிய புகார்களின்  அடிப்படையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


தணிகாசலம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறையின் தரப்பில்  கேட்டுக்கொள்ளப்பட்டது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்று தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது


கடந்த மே 5-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தணிகாசலம் கைது செய்யப்பட்டார். 


அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..