குறுஞ் செய்திகள்


 


சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்று திறனாளிகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சென்னை கிண்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். தமிழக அரசு வழங்கிய 1000 ரூபாய் உதவித்தொகை பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


 திருச்சி சிறுமி கொலை சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.


தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நாள் முதல் தற்போது வரை புதுக்கோட்டை, திருச்சு, கன்னியாகுமரி, நாமக்கல் விழுப்புரம், உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் மீதான தொடர் பாலியல் தாக்குதல் நடைபெற்றதாகவும், தொடர்ந்து 6வது முறையாக பாலியல் வன்முறை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது தேசிய குழந்தைகள் ஆணையம்.