மின் கட்டணம்-செலுத்த-கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது


சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடைசி தேதி மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, வரும் 30 ஆம் தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள நுகர்வோர், தங்கள் பகுதியில் கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 மக்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க வசதியாக தனது வாட்ஸ் அப் எண்ணை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் பகிர்ந்துள்ளார்.


சென்னை அடையாறு பகுதியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை துணை ஆணையர் விக்ரமன், அடையாறு காவல் மாவட்டத்திற்குகீழ் செயல்படும் 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் காவல்துறை துணை ஆணையரை நேரடியாக அணுகுவதற்கு 87544 01111 என்ற மொபைல் எண்ணை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்திலும் அதை பகிர்ந்துள்ளார்.