இன்றைய ராசிபலன் 10/07/2020


மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.


ரிஷபம்: உறவினர் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். வியாபாரத்தில் சில முயற்சிகளை செய்து லாபத்தை பெருக்குவீர்கள். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும்.


மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.


கடகம்: கடந்த சில நாளாக இருந்த பிரச்னைகள் குறைந்து மனம் லேசாகும். அலுவலகத்தில் கடினமான பணிகளை செய்து மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனைவியின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள்.


சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.


கன்னி: பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் இருந்த நிம்மதியற்ற சூழ்நிலை மாறும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.


துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.


விருச்சிகம்: இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


தனுசு: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.


மகரம்: பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினரின் செல்வாக்கு உயரும். சுபநிகழ்ச்சி ஏற்பாடுகளால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.


கும்பம்: இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபகாரியங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


மீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உதவிகேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவைதை தவிர்க்கவும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.மோகனா  செல்வராஜ்