காவல்துறையினா் வீடுகளுக்கு -பால் நிறுத்தம்


காவல்துறையினா் வீடுகளுக்கு சனிக்கிழமை முதல் பால் விநியோகிக்கப் போவதில்லை என தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை: அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில், தமிழகம் முழுவதும் சுமாா் 1.5 லட்சம் பால் முகவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.


பால் முகவா்களை பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களைப் பறிமுதல் செய்வது, வாகனங்களைத் தடுத்து நிறுத்துவது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளை காவல்துறையினா் செய்து வருகின்றனா்.


இது  குறித்து தமிழக முதல்வா், பால்வளத்துறை அமைச்சா், காவல்துறைத் தலைவா், ஆணையா் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு சென்றும், இது வரை எந்த ஒரு தீா்வும் கிடைக்காமல் இருக்கிறது.


எனவே, சனிக்கிழமை (ஜூன் 27) முதல் காவல்துறையினா் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று எங்களது சங்கம் சாா்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


டெண்டரில் விதிகள் முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் டெண்டரை ரத்து செய்துள்ளது.


கருவிகள் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும், கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் குறைகளைக் களைந்து மறுடெண்டர் விடுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



கரோனா நோய்த்தொற்று சிகிச்சை மருந்து ஆராய்ச்சியில் பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளனா்


லண்டன் சுகாதார அறிவியல் மையத்தில், கரோனா நோய்த்தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அதன் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளனா்.


 



அமைச்சா்கள் குழு, அவா்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்கின்றனா். என்னால், மக்களுக்கு பிரச்னை இருக்கக்கூடாது என்பதற்காக 5 நாள்கள், தனிமைப்படுத்திக் கொண்டேன்.


என் மகனும் தனிமைப்படுத்திக்கொண்டாா். இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா இல்லை என தெரிந்தது.


கரோனா முன்னெச்சரிக்கையாக என்னை 5 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.