முக்கியச் செய்திகள் !

முக்கியச் செய்திகள் !


ஜூன் 15ஆம் தேதி முதல் :


நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு ஆன்லைனில் ஜூன் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது


வெட்டுக்கிளிகளை விரட்ட ஆளில்லா டிரோன் :


ராஜஸ்தானில் விவசாய நிலங்களில் அழிவை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகளை விரட்ட ஆளில்லா டிரோன் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


வெட்டுக்கிளிகளை அழிக்க களமிறங்கிய மத்திய அரசு :


ஐந்து மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதையடுத்து அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது.


இன்று முதல் மீண்டும்... :


கொல்கத்தா விமான நிலையத்தில் 2 மாதக்காலத்திற்குப் பின் இன்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.


சென்னையின் குடிநீர்


சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட 1,200 கன அடி தண்ணீர் இன்றிரவு தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பல்கலைக்கழக அறிவுறுத்தல் :


கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்காமல் செயல்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.