திமுக - விசிக இடையே தொகுதி ஒப்பந்ததம்

 


*விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு*

*மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.*

*தொடர்ந்து, திருமாவளவன் முன்னிலையில், திமுக - விசிக இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.*

*கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.*

*இந்தமுறையும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.*

+++++++++++++++++++++++

 


       *"குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கக்கூடாது"

*👉சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம்*

*"குரங்கு'  சரவணன் என்ற பெயரால் கடுப்பான நீதிபதி!*

*"குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பட்டப்பெயர் வைத்து அழைக்கக்கூடாது”*

*வழிப்பறியில் ஈடுபட்டவரின் பெயரை குற்றப்பத்திரிகையில் 'குரங்கு' சரவணன் என குறிப்பிடப்பட்டதற்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் கண்டிப்பு!*

*நமது பெயர் நம் அடையாளம் எனக் கூறி, வழக்கு ஆவணங்களில் இருந்து குரங்கு என்ற வார்த்தையை நீக்கி உத்தரவிட்டது

+++++++++++++++++++

*மணிப்பூரில் ராணுவ அதிகாரி கடத்தல்!*

மணிப்பூரில் ராணுவ இளநிலைய அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு

கடத்தப்பட்ட அதிகாரியை உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து இந்திய ராணுவம் தேடிவருகிறது.

++++++++++++++++++