டி.ஐ.ஜி தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் இல்லை டிஜிபி அலுவலகம்     டி.ஐ.ஜி  தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் இல்லை.ஒரு நல்ல அதிகாரியை நாங்கள் இழந்து விட்டோம்" கோவையில் நன்றாக பணியை செய்து வந்தார் டிஐஜி விஜயகுமார்" டிஐஜி விஜயகுமாரின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் இல்லை" - டிஜிபி அலுவலகம்

 கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை; தேனி மாவட்டம் ரத்தினம் நகரை சேர்ந்தவர் மன அழுத்தம் காரணமாக தனது பாதுகாவலரின் துப்பாக்கியை பெற்று தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறைந்த கோவை டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் பூத உடலானது ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் அனைக்கரைப் பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பூத உடலுடன் ஓய்வு பெற்ற ஐஜி நாகராஜன் மற்றும் கோவை மாவட்ட போலீசார் தேனிக்கு சென்றனர்..

😭கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

டிஐஜி விஜயகுமார் மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் தனது பணிக்காலத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர் 

டிஐஜி விஜயகுமாரின் குடும்பத்தாருக்கும், காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் - முதல்வர்

😭காவல்துறை அதிகாரியான விஜயகுமாரின் இழப்பு வேதனை அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்- ஆளுநர் மாளிகை.


😭கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது"

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.