இந்திய அறிவு முறைக்கு மூன்று புத்தகங்கள்

 

       

         மேலாண்மைக் கல்வியில் இந்திய அறிவுக் கட்டமைப்பு: தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்த உள்ளடக்கம், அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மை தேவை.டாக்டர். பவன் குமார் சிங் இயக்குனர், ஐஐஎம் திருச்சிராப்பள்ளி

உலக நாடுகள் அனைத்தும் நாகரீகத்தின் தொடக்கத்தில் இருந்தபோது, இந்தியா வேதங்கள், உபநிடதங்களின் வடிவில் மிக ஆழமான அறிவைப் பெற்றிருந்தது. யாருக்குள் தேடல் உள்ளதோ அவரே ஆழமான அறிவையும், புரிதலையும் பெற முடியும். பொருளாதாரம், சமூகவியல், உளவியல், அரசியல் அறிவியல், மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் உள்ள நவீன சிக்கல்களுக்கு, பல்வேறு வேதங்களை ஆராய வேண்டிய அவசியம் உள்ளது. 


மலர்களைக் கோர்க்க நார் பயன்படுவது போன்று, பல்வேறு துறையிலுள்ள அறிவைப் பெறுவதற்கான இணைப்பாக சமஸ்கிருதம் பயன்படுகிறது. தற்போது பிரச்சனை என்னவென்றால், தற்போதுள்ள சமஸ்கிருத அறிஞர்கள் அல்லது பிற துறை சார்ந்த அறிஞர்களுடனோ அல்லது சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த அறிவைப் பெற்ற அறிஞர்களுடனோ விவாதிப்பதில்லை. முன்பெல்லாம், தனிப்பட்ட அளவிலும், குழு அளவிலும், சமூக அளவிலும் சிறந்த முடிவுகளை எடுக்க, பிற துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் சமஸ்கிருத அறிஞர்களுடன் கலந்தாலோசித்தனர். இதற்காக அனைத்துத் துறை சார்ந்த அறிவைப் பெற சமஸ்கிருத அறிஞர்கள், அனைத்துத் துறை சார்ந்த அறிஞர்களைத் தேடிச் சென்றனர். இதனால்தான் உபநிடத காலத்தில் அறிவை உருவாக்கும் முறையாக சாஸ்திரம் இருந்தது. 


எங்கள் நிறுவனத்தில் இந்திய அறிவு முறையைப் பயன்படுத்துவதற்காக, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருத வேதங்களிலிருந்து மேலாண்மை சூத்திரங்கள் என்ற புத்தகம் உட்பட இந்திய அறிவு முறைக்கு தொடர்புடைய மூன்று புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களைத் தவிர்த்து, ஒழுக்க நெறிகளைக் கையாள்வது குறித்த பல கட்டுரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எங்கள் கல்வித் திட்டங்களில் மனித விழுமியங்கள் மற்றும் வணிகம் குறித்த பற்றிய படிப்புகள் மட்டுமின்றி, தேசியக் கல்விக் கொள்கை -2020-ஐப் பின்பற்றி ஒழுக்க நெறி குறித்த பல்வேறு படிப்புகள் உள்ளன.


நமது அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதப்பட்ட புத்தகங்களின் கண்காட்சியை எங்கள் நூலகம் ஏற்பாடு செய்கிறது. இந்திய அறிவு குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், எம்பிஏ மாணவர்களுக்காக தேர்வுப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நடத்தை கற்றல் மற்றும் சமஸ்கிருத வேதங்களிலிருந்து நுண்ணறிவு என்ற பாடம் அதில் ஒன்றாகும். இதில், பல்வேறு வேதங்களில் உள்ள தகவல்களைக் குறிப்பிட்டு, முக்கிய மதங்களின் புனித நூல்கள் மற்றும் துறவிகளின் அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன. இப்படிப்புகளை அறிமுகம் செய்ததற்கான நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதே, சமஸ்கிருத மொழியைத் தேர்வு செய்ததற்கான காரணமாகும். 


இது முதுகலை எம்பிஏ கல்வியின் பின்னணியில் இந்திய அறிவைக் கற்பிக்க நாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளின் சுருக்கமாகும். அனைத்து மட்டங்களிலும் பணிபுரியும் மேலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்காக இந்திய அறிவு அமைப்பின் கருப்பொருளுடன் இணைந்த அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.